திருநெல்வேலியில் பறக்கும் படையினரால் இதுவரை 95 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கினை சேகரிப்பதற்காக பொதுமக்களுக்கு பணமோ அல்லது பொருளோ வழங்காமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை தேர்தல் குழு நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி தனி நபர் கொண்டுவரும் பணத்தினை பறிமுதல் செய்து வந்தனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில பணியாற்றிய பறக்கும் படையினர் இதுவரை 95,00,000 ரூபாய் வரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவர்கள் 622.16 கிராம் தங்கத்திணையும், 10.70 கிலோ வெள்ளியையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதனையடுத்து பல பொருள்களும் இவர்களால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.