தேனியில் வருமான வரித்துறையினர் அ.தி.மு.க ஒன்றிய துணைச்செயலாளர் வீட்டிலிருந்து 2,17,00,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை தேனி மாவட்டத்திலிருக்கும் ஆண்டிப்பட்டி தொகுதியில் வருமான வரித்துறையினர் முகாமிட்டு அப்பகுதியில் வசிக்கும் சில முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அதே தொகுதியிலிருக்கும் அ.தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளரான அமரேசன் என்பவரது வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் உரிய ஆவணங்களின்றி இருந்த 2,17,00,000 ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.