Categories
விளையாட்டு

“ஒன்னும் கவலை படாதீங்க இந்திய அணியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கு…!!” மைக்கேல் வாகன் புகழாரம்…!!

19 வயதிற்கு உட்பட்டவர்களுக்காண ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்த போட்டியின் அரையிறுதி சுற்றில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது. தீவிரமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் யாஷ் தல் 110 ரன்களில் வெளியேறினார்.

இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 96 ரன் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதனையடுத்து இந்தியாவில் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக உள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ஜூனியர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் பங்களிப்பு அபாரமாக உள்ளது. இந்திய அணிக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. யாஷ் தல் ஈடு இணையில்லாத வீரர் என அவர் பாராட்டினார்.

Categories

Tech |