தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் டீசல் விலையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது .
விலையை கட்டுபாட்டில் கொண்டு வருவதற்கு பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தற்போதைய கூட்டணி சுமூகமாக செல்கிறது. வருகிற 22ஆம் தேதிக்குள் இடங்கள் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.