உயிரிழப்பதற்கு முன்பாக ஜெயலலிதா பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. அப்போலோவில் மூச்சுத்திணறலின் போது, ஜெ.. பேசிய 42 வினாடிகள் கொண்ட ஆடி டியோவில், oh sad எதுல ரெக்கார்ட் பண்ணுறீங்க என ஜெ.. கேட்கிறார். அதற்கு vlc ரெக்கார்டு என மருத்துவர் பதிலளிக்கிறார். இதனையடுத்து, கேக்குதா. அப்போ இருந்தபோது கூப்பிட்டேன். அப்போ எடுக்க முடியலனு சொன்னீங்க.
எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு நீங்களும் செய்றீங்க. எடுக்க முடியலான விடுங்க என ஜெ.,கூறுகிறார். உயிரிழப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் இருந்த போது டாக்டர் சிவக்குமாருடன் ஜெயலலிதா பேசிய ஆடியோ ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் அது இப்போது மீண்டும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.