Categories
மாநில செய்திகள்

இல்லனு ஒன்னும் இருக்காது…. முதல்வர் சொன்ன மகிழ்ச்சி தகவல்

மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அம்மா அவர்களின் உறுதியாகும் என முதல்வர் தெரிவித்தார்.

தனியார் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது மாண்புமிகு அம்மா அவர்களின்  உறுதியாகும். இதன்படி சிவகங்கை, திருவண்ணாமலை ,சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகம், புதுக்கோட்டை மற்றும் கரூர் அரசு மருத்துவமனை கல்லூரிகளில் அணைத்து  மருத்துவப்படிப்பு திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. இதனால் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் 1350 கூடுதல் மருத்துவ பட்டப் படிப்புகள் உருவாக்கப்பட்டு, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவை நனவாக்கிய அரசு மாண்புமிகு அம்மாவின் அரசே ஆகும். அதிகளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு ,மேலும் புதிய மருத்துவ கல்லூரிகளை துவங்கப்பட வேண்டும் என மாண்புமிகு அம்மாவின் அரசு முடிவெடுத்துள்ளது.

அதனடிப்படையில் மாண்புமிகு அம்மாவின் அரசு மத்திய அரசுக்கு  கொடுத்த திட்டத்தின் காரணமாக இதனை குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ கல்லூரிகளில்  கட்டமைப்புகளை உருவாக்கி அதற்கு உடனடியாக முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினர். தற்போது தமிழ்நாட்டில் உள்ள 3,250 மருத்துவ பட்டப் படிப்புகள் மற்றும் 11 மருத்துவ கல்லூரிகளுக்கான 1,650 புதிய மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர்ந்து 2021-2022 ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் கனவுகளை மெய்ப்பிக்கும்  வகையில் 6 முதல் 12 வரை  அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முழு ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க மாண்புமிகு அம்மாவின் அரசு அவசர சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |