நெல்லையில் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிடுவதற்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சிவா, வெளியூரில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் குற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக அவரது ஊருக்கு வந்துள்ளார். அப்போது விசாரணை முடிந்ததும் தனது நண்பர்களுடன் ஒரே வீட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சேரன்மகாதேவி காவல்துறையினர் சிவாவையும் அவரது நண்பர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
இதனை கண்டித்து நேதாஜி சுபாஷ் சங்க தலைவரான மகாராஜன் தலைமையில், சிவாவின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சேரன்மகாதேவி உதவி சூப்பிரண்டு, அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றுள்ளார்கள்.