Categories
Uncategorized திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஒன்னே ஒன்னு வச்சிருந்தேன்”, எவனோ ஆட்டைய போட்டுட்டான்…. எப்படியாவது மீட்டு குடுங்க…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

திருநெல்வேலியில் லோடு ஆட்டோவை திருடி விற்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் ராமசாமி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகன் அருணாச்சலம் சொந்தமாக லோடு ஆட்டோ ஒன்றை வைத்து, தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்த ஆட்டோ காலையில் எழுந்து பார்த்த போது காணவில்லை. அதாவது அவருடைய லோடு ஆட்டோவை மர்ம நபர் எவரோ திருடி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அருணாச்சலம் தனது லோடு ஆட்டோவை காணவில்லை என்று விக்ரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை செய்ததில், அதே பகுதியைச் சேர்ந்த வைகுண்டம்மணி என்பவர்தான் ஆட்டோவை திருடியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனிடையே வைகுண்டமணி ஆட்டோவை மதுரையில் விற்க முயன்றுள்ளர். இந்நிலையில் காவல்துறையினர் அவரை சாத்தூரில் வைத்து கைது செய்து ஆட்டோவை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

Categories

Tech |