Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒன்றன் பின் ஒன்றாக மோதி…. விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. 4 பேர் உயிரிழப்பு…!!

ஒன்றன் பின் ஒன்றாக பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இன்று பிற்பகல் தர்மபுரி மாவட்டம் எல்லை பகுதியில் பயங்கர விபத்து நடைபெற்று உள்ளது. அதாவது ஒன்றன்பின் ஒன்றாக சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான வாகனங்கள் அப்பளம் போன்று நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியைப் பொறுத்தவரை அதிக விபத்து நடக்கும் இடமாகவே கருதப்படுகிறது.

இதுவரை ஏராளமான விபத்துகள் ஏற்கனவே இந்த பகுதியில் நடந்துள்ளது. இந்த விபத்தினால் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது ராட்சத கிரேன்கள் உதவியுடன் விபத்து ஏற்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்த படுகின்றது. ஆனாலும் இதுவரை போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

Categories

Tech |