தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த வருடம் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதனால் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நிகழ்ச்சியும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்ததால் இன்று கிராமசபை கூட்டம் நடத்த அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பேஸ்புக்,வாட்ஸ் அப் இணையதளம் மூலமாகவும் மற்றும் நேரில் சென்று கிராம சபை கூட்டங்களுக்கு பொதுமக்களை பங்கேற்க ஊராட்சி மன்ற தலைவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஊராட்சிகளை தவிர மற்ற பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். அதன்படி மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கின்றார்.
கிராமசபை கூட்டங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறை, கிராம பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், வடகிழக்கு பருவமழை மற்றும் கழிப்பறை கட்டுவது போன்ற 42 விதமான பிரச்சனைகள் விவாதிக்கப்பட வேண்டிய பொருட்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகாசி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகளில் தேர்தல் நடைபெற 6 ஊராட்சிகளை தவிர மற்ற 48 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு ஊராட்சி மன்றத் தலைவர்களும் வாட்ஸ்அப் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும், கிராம மக்களை நேரடியாக அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும் இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.