ஆஸ்திரேலியாவில் பெற்ற தாயை 90 முறை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்த இளம்பெண்ணிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 57 வயதுடைய ரீட்டா காமிலெரி என்ற பெண் கடந்த 2019 ஆம் வருடம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் ரீட்டா காமிலெரியின் மகள் ஜெசிகா காமிலெரியை(27) கைது செய்துள்ளனர். அப்போது அவரின் உடல் முழுக்க ரத்தம் வழிந்துள்ளது.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தற்போது நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், ஜெசிக்காவிற்கு 21 வருடங்கள் மற்றும் 7 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் விசாரணையில் ஜெசிகா, தன் தாயார் தன்னை உளவியல் சிகிச்சைக்கு அனுப்ப முயன்றதால் கொடூர தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் சமயலறையிலிருந்த 7 கத்திகளை பயன்படுத்தி தன் தாயின் உடல் முழுவதும் சுமார் 90 முறை கொடூரமாக தாக்கியிருக்கிறார். அதன் பின்பு, அவரின் தலையை துண்டித்ததோடு ரத்தம் வழிய வீட்டிற்கு வெளியில் கொண்டு சென்று நடைபாதையில் வீசியிருக்கிறார்.
அதன் பின்பு அவரே காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். மேலும் தன் தாயின் கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் முதலில் பேசிய அவர் அதன் பிறகு தற்காப்புக்காகதான் கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரேத பரிசோதனையில் ரீட்டா காமிலெரியின் உடலில் சுமார் 100 முறை கத்தியால் குத்தப்பட்டதற்கான காயங்கள் இருந்துள்ளது.
இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஜெசிகாவின் வாதங்களை எதனையும் நீதிபதிகள் ஏற்கவில்லை. எனினும் ஜெசிகா உளவியல் ரீதியான பாதிப்பு அடைந்தவர் என்பது மட்டும் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.