Categories
சினிமா தமிழ் சினிமா

ஒன்றாக நின்று போராடுகிறோம்… ஒரு போதும் விடமாட்டோம்…. டி.ராஜேந்திரன் சரவெடி பேட்டி …!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபா ஜெயின், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது சட்டதிட்ட விதியின் படி  விதிமீறல் என பதவி நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்திரன்,

தமிழ் திரைப்பட சங்க தலைவர் பதவிக்கு 388 ஓட்டில்  கிட்டத்தட்ட 200 ஓட்டு முறைகேடு என்று சொன்னோம். இப்பவும் சொல்கிறோம். விடமாட்டேன் என்று சொல்கிறார் சிங்காரவேலன் மற்றும் ஜேஎஸ்கே எல்லாரும். நிச்சயமாக நாங்கள் தொடர்ந்து சட்டரீதியாக போராடுவோம். தார்மீக ரீதியாக போராடுவோம்.

எங்களுடைய போராட்டம் தொடரும். இவர்கள் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் அவர்களுக்கும் நல்லது இல்லை. அந்த சங்கத்திற்கும் நல்லது இல்லை. நான் வெளியில் பதவியில் இருக்கிறனோ…. இல்லையோ,  நான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நீங்கள் என்னை என்ன செய்தாலும் நான் தலைமை பதவியில் இருக்க வேண்டும், தலையாக இருக்க வேண்டும், எங்க இருந்தாலும் அந்த சங்கம் நன்றாக இருக்கவேண்டும்.

அந்த சங்கத்தில் இருக்கக்கூடிய அந்த உறுப்பினர்களுக்காக, அங்கு இருக்கக்கூடிய எங்களுக்காக வாக்களித்த நல்லவர்களுக்காகவும் சரி, எங்களுக்கு வாக்களிக்காத அவர்களுக்கும் சரி அவர்கள் நன்றாக இருப்பதற்காக நாங்கள் அத்தனை பேரும் ஒன்று கூடினோம். நங்கள் எல்லாம்  தனியாகதான் நின்றோம்.  ஜேஎஸ்கே, சிங்காரவேலன் தனியாக நின்றார்.  இன்றைக்கு நாங்கள் ஏன் ஒன்றாக நின்று போராடுகிறோம், இது எங்களுடைய போராட்ட குணம் என டி.ராஜேந்திரன் தெரிவித்தார்.

Categories

Tech |