Categories
தேசிய செய்திகள்

“ஒன்றா. இரண்டா …15 திருமணங்கள்”…. முதலிரவு முடிந்ததும் மணமகள் செய்த காரியம்…. அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்….!!!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த காந்தா பிரசாத் நாத் என்பவருக்கு நீண்ட காலமாக திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தினேஷ் என்பவரின் ஏற்பாட்டின் படி பூஜா என்பவருடன் காந்தா பிரசாத்துக்கு வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு திருமணம் முடிந்து எட்டு நாட்கள் கழித்து பூஜா திடீரென தனக்கு உடம்பு சரியில்லை என்று கணவரிடம் கூறியுள்ளார். அதனால் மனைவியை தினேஷ் வீட்டிற்கு கணவர் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பூஜா திரும்பி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

இடேஸ் வீட்டிற்கு சென்ற மனைவி என்ன ஆனார் என்று பிரசாத் பூஜாவுக்கு போன் போட்டார். ஆனால் போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. உடனே தினேஷுக்கு போன் செய்தபோது, அந்த நம்பரும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. அந்த சமயம் பார்த்து எதர்ச்சையாக பீரோவை திறந்தால், பீரோவில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகள் எதுவும் காணவில்லை. அப்போதுதான் பிரசாந்த் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உள்ளார்.

உடனடியாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பூஜாவை கைது செய்தனர். அதன்பிறகு சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், அந்தப் பெண்ணின் நிஜப் பெயர் சீமா கான். அவருக்கு பிரசாத்துடன் நடந்தது முதல் திருமணம் அல்ல, அதில் ஐந்தாவது திருமணம். திருமணம் செய்து கொள்வது அவரது தொழில். 15 பேரையும் கல்யாணம் செய்து கொண்ட அவர் அனைவரிடமும் ஏமாற்றி நகை பணம் கொள்ளை அடித்து ஓடி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு திருமண மோசடிக்கும் தினேஷ் அந்த பெண்ணிற்கு 30 ஆயிரம் ரூபாய் தருகிறார். மேலும் இந்த கும்பலில் 15க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர்.

அதில் 3 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் செய்துவிட்டு முதலிரவு முடிந்ததும் நகை பணத்துடன் ஓட்டமெடுக்கும் இந்தப் பெண்ணால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

Categories

Tech |