Categories
மாநில செய்திகள்

ஒன்றிய அரசை நம்பவில்லை…. மாநில அரசே செய்யுங்கள் – கமல் வலியுறுத்தல்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பின்னர் வந்த பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக 0.25 காசுகள் அதிகரித்து ரூ.93.15க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.0.30 காசுகள் அதிகரித்து ரூ.86.65 க்கும் விற்பனையாகி வந்தது. இதைத்தொடர்ந்து  நேற்றும், இன்றும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்த்துவதற்கு கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வரி வரும் வழிகள் அல்ல. மத்திய அரசிற்கு எரிபொருட்களின் விலையை குறைக்கும் எண்ணம் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்ததை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Categories

Tech |