ஒன்றிய எரிசக்தி துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ 361 கோடியை கடந்த 4ஆம் தேதி அன்றே செலுத்திவிட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட் செய்துள்ளார்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் ’PRAAPTI PORTAL’ இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை இல்லை.
நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை. சர்ச்சைக்குரிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும், அவகாசமும் இல்லாமல் தன்னிச்சையாக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதில்லை. சில காற்றாலை மற்றும் சூரிய ஒளி நிறுவனங்களுக்கு மட்டுமே குறைவான தொகை நிலுவையில் உள்ளது. அதுவும் ஓரிரு நாட்களில் வழங்கப்பட்டுவிடும்” என்று தெரிவித்துள்ளார்..
ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது.
ஒன்றிய அரசின் ’PRAAPTI PORTAL' இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை இல்லை. (1/3) pic.twitter.com/6Y0uZnZNAI
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) August 19, 2022