Categories
தேசிய செய்திகள்

ஒன்று வாங்கினால் 2 சரக்கு பாட்டில் இலவசம்….. அலை மோதும் கூட்டம்….. எங்கு தெரியுமா?….!!!!

டெல்லியில் ஒரு மதுபானம் வாங்கினால் இரண்டு சரக்கு பாட்டில் இலவசம் என்று கூறிய காரணத்தினால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.

சரக்கு வாங்க சலுகைகள் அறிவித்தால் மது பிரியர்கள் சும்மாவா இருப்பாங்க. அப்படித்தான் டெல்லியில் மதுக்கடைகள் தற்போது நிரம்பி வழிகின்றது. டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளது. இந்த விற்பனை கடைகளுக்கு லைசன்ஸ் பெற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் டெல்லியில் தனியார் மது விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றது.

இதனால் தங்களிடம் இருக்கும் மது பாட்டில்கள் முழுவதையும் விற்பனை செய்ய முடிவு செய்த தனியார் மது கடைகள் ஒரு மது பாட்டில் வாங்கினால் இரண்டு மது பாட்டில் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு மது விற்பனை கடைகள் முன்பு திரண்டுள்ளனர். இதனால் மது கடைகள் முன்பு கடுமையான கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு பிடித்தமான சரக்கு பாட்டில்களை வாங்கி சென்றனர். ஒரு பாட்டில் சரக்குக்கு இரண்டு பாட்டில் கிடைத்ததால் மது பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆனால் பலருக்கும் மது பாட்டில் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த அறிவிப்பால் டெல்லி நகர வீதிகளில் மது கடைகள் திருவிழா கூட்டம் போல் காணப்பட்டது.

Categories

Tech |