Categories
தேசிய செய்திகள்

ஒன் சைடு லவ்…. நோ சொன்ன இளம்பெண்… காதலன் செய்த கொடூர செயல்…அதிர்ச்சி சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ருக்கிசிங்.  இவர் தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டுக்குள் புகுந்த பிரேம் சிங் என்ற நபர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை தடுத்து நிறுத்தி கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் இளைஞனைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் அனுப்பினர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பிரேம் சிங், ருக்கிசிங்கை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை ஏற்க மறுத்த காரணத்தினால் இப்படி செய்தது தெரியவந்தது. மேலும் ருக்கிசிங்கை உறவினர் பிரேம் சிங் என்பதும் தெரியவந்தது. ருக்கிசிங்கை கழுத்தில் குத்த முயன்றதால் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ருக்கிசிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |