Categories
மாநில செய்திகள்

ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும்…. பாதையில் முதல்வர் இணைந்தது மகிழ்ச்சி – கமல் டுவிட்…!!!

தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்டும் பாதையில் முதல்வர் இணைந்ததில் மகிழச்சி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |