பிரிட்டனில் மூளைச்சாவு அடைந்த ஒருவர் உயிர் பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்தவர் லூயிஸ் ரோபர்ட்ஸ் (18 வயது). இவர் கடந்த மார்ச் 13 ம் தேதி அன்று கார் மோதிய விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் லூயிஸ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. இதனையடுத்து லூயிஸ்க்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் லூயிஸின் பெற்றோர் அவரை கருணை கொலை செய்யவும், மேலும் லூயிஸ் உடல் உறுப்புகளை ஏழு பேருக்கு தானம் செய்யவும் மருத்துவர்களிடம் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கன ஏற்பாடுகளை செய்துள்ளனர். அச்சமயம் லூயிஸ் அருகில் வந்த அவரது அக்கா ஜடேரொபேர்ட்ஸ் (28 வயது) “தம்பி நான் ஒன், டூ, த்ரீ சொல்லும்போது நீ சுவாசிக்க ஆரம்பிக்கவேண்டும் என்று கூறிவிட்டு எண்களை சொல்ல ஆரம்பித்துள்ளார். அப்போது சினிமாவில் நடப்பது போல ஜடேரொபேர்ட்ஸ் த்ரீ சொல்லி முடிக்கவும் லூயிஸ் சுவாசிக்க ஆரம்பித்துள்ளார்.
மேலும் அவர் கண்களை சிமிட்டவும், கை கால்களை அசைக்கும் செய்துள்ளார். இதனை கண்டு ஆச்சரியப்பட்ட மருத்துவர்கள் உலகிலேயே மூளைச்சாவு அடைந்து உயிர்தெழுந்தவரில் லூயிஸ் இரண்டாவது நபர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் லூயிஸ் உயிர் பெற்று வந்ததை நினைத்து அவரது குடும்பம் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.