Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஒன் லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன கமல்”….. பிரபல இயக்குனர் ஓபன் டாக்…!!!!

கமலிடம் விக்ரம் திரைப்பட கதை பற்றி கூறிய அனுபவத்தை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் குறைந்த வருடங்களிலேயே முன்னணி இயக்குனராக மாறி வலம் வருகின்றனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க விஜய் சேதுபதி பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படமானது வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் கமலிடம் கதை சொன்ன அனுபவம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, கைதி திரைப்படத்தை பார்த்துவிட்டு கமல் தன்னை பாராட்டினார். இதையடுத்து கமலஹாசன் தரப்பிலிருந்து ஏதாவது கதை இருக்கின்றாத என கேட்கப்பட்டது. மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நான் கமலை சந்திக்க சென்றேன் மேலும் என்னிடம் எந்த கதையும் இல்லை. ஒரு லைன் ஸ்டோரி மட்டுமே இருந்தது. அதை கமலிடம் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது என கூறியுள்ளார்.

Categories

Tech |