Categories
மாநில செய்திகள்

“ஒபிஎஸ் பச்சோந்தியை விட அதிகமா நிறம் மாறிட்டே இருக்காரு”…. எடப்பாடி பழனிசாமி ஸ்பீச்….!!!!

சென்னை ராயப் பேட்டையில் அ.தி.மு.க அலுவலகம் சென்ற இடைக் கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுக-வில் பிளவு கிடையாது. கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் தான் சில பேர் நீக்கப்பட்டு இருக்கின்றனர். அ.தி.மு.க பொதுச் செயலாளரை தேர்வுசெய்யும் பணி விரைவில் துவங்கும். கீழ்த் தரமான எண்ணத்தில் இருக்கும் போது, தி.மு.க மற்றும் உடந்தையாக இருக்கும் ஓபிஎஸ்-ஐ எப்படி தொண்டர்கள் மன்னிப்பார்கள். தலைமை அலுவலகத்தை சேதப்படுத்திய கீழ்த் தரமான வேலையில் ஓ.பி.எஸ் ஈடுபட்டார்.

ஆகவே பச்சோந்தியைவிட ஓபிஎஸ் அதிக நிறம் மாறுவார். ஜெயலலிதா மற்றும் அதிமுக-வுக்கு அவர் விசுவாசமாகவே இருந்ததில்லை. இதற்கிடையில் ஓபிஎஸ் மன்னிப்பே கேட்டாலும் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். 96 % பொதுக் குழு உறுப்பினர்கள் எங்களுடன் இருக்கின்றனர். இரட்டைஇலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. அதிமுக-வுக்கு விஸ்வாசமில்லாதவர் ஓபிஎஸ். கடந்த 1989-ல் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றிவர் ஓபிஎஸ். போதைப் பொருளை விற்பதே திமுக-வினர் என்பதால்தான் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசால் முடியவில்லை என்று எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |