கிழக்கு லடாக்கின் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியதற்கு சீனா பதிலடி கொடுத்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் ‘குவாட் நாடுகளின் ‘ வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி கூறும் வகையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் “எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியா சீனா இரு நாடுகளும் தங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும்.
மேலும் எல்லைப் பகுதியில் அமைதியை பராமரிக்க வேண்டும் என்பது தான் எப்போதும் சீனாவின் நிலைப்பாடு. ஆனால் கிடப்பில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பும் ராஜதந்திர வழியாகவும் மற்றும் இராணுவ வழியாகவும் தொடர்பை தொடர்ந்து செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்” என அப்பேட்டியில் கூறினார். குறிப்பாக குவாட் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்திற்கு முன், அந்த கூட்டமைப்பு தங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு கருவி என சீன கூறியிருந்தது.