Categories
உலக செய்திகள்

“ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்” நாட்டில் ஊழல் ஒழியட்டும் முக கவசம் அணிகிறேன் – சபதம் எடுத்த மெக்சிகோ அதிபர்

மெக்சிகோ நாட்டில் ஊழல் முழுவதுமாக ஒழிந்தால் மட்டுமே  முகக்கவசம் அணிவேன் என்று அந்நாட்டு அதிபர் லோபஸ் ஓபரேடர் சபதம் எடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோயால் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். கொரோனாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.இதனால் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு சமூக இடைவெளி  மற்றும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து வருகின்றோம். கொரோனா அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப், முக கவசம் அணிவதை தவிர்த்து வந்துள்ளார். அதனால் தொடர்ந்து விமர்சனங்கள் வந்த காரணத்தால் டிரம்ப் முகக்கவசம் அணிய தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் மெக்சிகோ நாட்டின் அதிபர் லோபஸ் ஓபரேடர், தனது நாட்டில் ஊழல் முழுவதுமாக ஒழிந்தால் மட்டுமே தான் முகக்கவசம் அணிவேன் என்று அதிரடி முடிவை கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசும்போது, “நாம் ஒரு ஒப்பந்தம் போடுவோம். இந்த நாட்டில் ஊழல் மிக விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நான் முகக்கவசம் அணிவேன். பொருளாதாரம் மேம்பட முக கவசம் ஒரு காரணமாக இருந்தால் அதனை உடனே அணிவதற்கு தயாராக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |