Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஒப்பந்த பத்திரத்தின் கெடு முடிந்தது”…. பா.ஜ.க பிரமுகரின் மனைவி மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் ஆர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர் 3-வது குறுக்கு சாலையில் அரசு அனுமதி பெற்ற ஏ.பி.சி மாண்டிச்சேரி பள்ளியை நான் நடத்தி வந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் திருச்சியை சேர்ந்த பா.ஜ.க பிரமுகரின் மனைவியிடம் பள்ளியை பார்த்துக் கொள்ளுமாறு கூறி வாடகை ஒப்பந்த பத்திரம் போட்டு ஒப்படைத்தேன்.

இந்நிலையில் வாடகை ஒப்பந்த பத்திரத்தின் கெடு முடிந்த பிறகும், பள்ளியின் கட்டிடம் 30 ஆண்டுகள் கடந்து பழுதான நிலையில் தொடர்ந்து பள்ளியை நடத்தி வருகின்றனர். பள்ளியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது எனது பெயரில்தான் வரும் என்பதால் கட்டிடத்தை காலி செய்யுமாறு கூறினோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு மிரட்டல் விடுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |