பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிக்கு தடுப்பு மருந்து அமைப்பின் ஒப்புதலுக்காக அந்நிறுவனம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான பைசர் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் சில நாட்களில் அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பைசர் தடுப்பு மருந்து நிறுவன அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா இதுகுறித்து கூறுகையில், அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து ஒப்புதல் பெற்ற சில மணிநேரத்திலேயே தடுப்பு மருந்துகள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த கொரோனா தடுப்பு மருந்து -70 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் குளிப்பதன பெட்டியில் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே மேலை நாடுகளில் தற்போது குளிர் நிலவுவதால் அங்கு இவற்றை பாதுகாப்பது மிக எளிது. மேலும் தாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த மருந்து அனைத்து தரப்பினருக்கும், வயதானவர்களுக்கும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுப்பதாகவும், தீவிர பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்றும் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.