Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரானால் பிப்ரவரிக்குள் 3-வது அலை – இந்தியாவுக்கு முக்கிய அலெர்ட் …!!

ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பிப்ரவரிக்குள் இந்தியாவில் 3-வது அலை ஏற்படும் என ஐஐடி விஞ்ஞானி மனீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா உருமாறிய தொற்று 3-ஆவது அலையாக அக்டோபர்க்குள் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். அதன்படி 3-ஆவது அலை தாக்கவில்லை. இந்த நிலையில் வருகிற பிப்ரவரிக்குள் ஒமைக்ரான் தொற்றுடன் 3-ஆவது அலை உச்சத்தை எட்டும் என இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானியுமான மனீந்திர அகர்வால் எச்சரித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இப்போதைய கணிப்பு படி, தற்போதைய புதிய வைரஸ் உடன் வருகிற பிப்ரவரிக்குள் 3-ஆவது அலை உச்சத்தை எட்டும் எனவும், அப்போது நாட்டில் நாள்தோறும் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் எனவும், ஆனால் இது 2-ஆவது அலையை விட மிதமானதாகவே இருக்கும் எனவும், குறிப்பிட்டார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எனவும், தற்போது வரை இந்த தொற்று அங்கு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |