Categories
மாநில செய்திகள்

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்…. முதலமைச்சர் நாளை ஆலோசனை….!!!!

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நாளை முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கின்றார்.

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமிக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழகத்திலும் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த பலருக்கும் இந்த ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதில் பலரும் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளி, கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனையில் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Categories

Tech |