Categories
உலக செய்திகள்

‘ஒமிக்ரான்’ உருமாற்றம் அடையுமா?…. யாரெல்லாம் பாதிக்கப்படுவாங்க?…. விஞ்ஞானி சொன்ன முக்கிய தகவல்….!!!!

அமெரிக்க விஞ்ஞானியான கிறிஸ்டோபர் முர்ரே ஒமிக்ரான் அடுத்த உருமாற்றம் அடையுமா ? என்பது புதிராக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ‘ஒமிக்ரான்’ உருமாற்றம் அடைய வாய்ப்பே இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஒமிக்ரான் வைரஸ் வலுவாகும் போது உருமாற்றம் அடைவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி ஒமிக்ரான் உருமாற்றம் அடைந்தால் அது உலக நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கிறிஸ்டோபர் கூறியுள்ளார்.

அதேபோல் வைரஸ் 30 முதல் 45 நாட்களில் உருமாற்றம் அடையும். வைரஸ் உருமாற்றம் அடைவதற்கு சில நாட்கள் எடுத்துக்கொள்ளும். இருப்பினும் ஒமிக்ரான் வைரஸ் 90 முதல் 95 சதவீதம் வரை குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். ஆனால் முதியோரும், சில குறிப்பிட்ட பிரிவினரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கிறிஸ்டோபர் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |