Categories
மாநில செய்திகள்

ஒமிக்ரான் எதிரொலி…. சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டிலும் ஒமிக்ரான் அச்சம் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு நெல்லையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இன்று முதல் ஜனவரி 2-ம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணிக்கு இன்று இரவு பக்தர்கள் வரவும், கடற்கரையில் கூடுவதற்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |