Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது பரவி வரக்கூடிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவுவதால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சென்னையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதாவது சென்னையில் நேற்று ஒரேநாளில் 776 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணியாற்றுவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றுவோருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories

Tech |