Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. பள்ளி கல்லூரிகள் மூடல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாட்டில் இதுவரை 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் தொற்று 781 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 241 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் அதிகபட்சமாக 238 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று பதிவாகியுள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிரா 167, குஜராத் 73, கேரளா 65 மற்றும் தெலங்கானாவில் 62 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த திங்கள் கிழமை நிலவரப்படி மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,31,065 ஆக உயர்ந்தது. அன்றைய தினம் புதிதாக 439 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 10 பேர் திங்களன்று நோய் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 19,726 ஆக உயர்ந்தது. இவ்வாறு அதி வேகத்தில் பரவும் தொற்று நோயான ஒமிக்ரான் பரவல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாநிலத்தில் தொற்றுநோய் நிலைமையை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

அதன்பின் தேவைப்பட்டால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சிறிது நாட்கள் மூடலாம் என்றும் அறிவித்துள்ளார். தெற்கு 24 பரகானாஸ், கங்கா சாகர் என்ற இடத்தில் ஒரு நிர்வாக ஆய்வுக் கூட்டத்தை மேற்கொண்ட முதல்வர், கொல்கத்தாவுக்கு வரும் சர்வதேச விமானங்கள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் கங்கா சாகர் மேளா காரணமாக நகரில் ரயில்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை என்றும், கொல்கத்தாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாட்டு மண்டலங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |