நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது.
அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானாவில் வரும் 8 முதல் 12-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சந்திரசேகர் ராவ் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.