Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் எதிரொலி…. 2 நாட்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி மராட்டிய மாநிலத்தில் நேற்று இரவு ஒரே நாளில் 23 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாநிலத்தில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42 பேர் குணமாகி உள்ளனர். இந்நிலையில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. அதன்படி  இன்று மற்றும் நாளை கிறிஸ்தவ ஆலயங்களில்  நடக்க இருக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் 50% பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஆலயங்களின் வெளியில் கடைகள் போட அனுமதி கிடையாது. மேலும் அதிக மக்கள் கூடுகின்ற வகையில் பேரணி, ஊர்வலங்கள் மற்றும் வானவேடிக்கைகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.

Categories

Tech |