Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் BF-7 தொற்று…. நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?…. விளக்கம்….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

பழையபடி கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறும் கொரோனா உறுதியானவர்களின் மரபணுவை சோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் பிஎப் 7 வைரஸ் இந்தியாவில் மூன்று பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய மருத்துவ கழகத்தை சேர்ந்த மருத்துவர் அணில் கோயல், முழு ஊரடங்கிற்கு அவசியம் இல்லை என்று பரிந்துரைத்துள்ளார். 95% மக்கள் தடுப்பூசி செலுத்தி விட்டதால் நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |