Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரானிலிருந்து மீண்டவர்களுக்கு இப்படி ஒரு வலியா?…. வெளியான தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஒமைக்ரான் லேசானது அறிகுறிகள் மட்டுமே தென்படும் என்ற அடையாளத்துடன் அறிமுகமான தொற்றாகும். ஒரு சில நாட்களிலேயே கொரோனாவிலிருந்து விடுபட்டாலும், அதிலிருந்து மீள்பவர்களுக்கு தாங்கமுடியாத முதுகுவலி சில நாட்களுக்கு நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒமைக்ரானிலிருந்து மீண்டு வரும் சிலருக்கு முதுகு வலியுடன் இடுப்பு வலியும் சேர்ந்து கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. ஒமைக்ரான் பாதிப்பின் போது லேசான தொண்டை வலி, குளிர், காய்ச்சல் இருந்தது. ஆனால் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் கால்கள் மற்றும் முதுகில் வலி ஏற்பட்டது எனது அனைத்து எலும்புகளும் வலியை உணர்ந்தன. பாராசிட்டமால் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் இடுப்பு வலி கடுமையாக இருந்தது. ஆனால், பாராசிட்டமால் எடுத்துக் கொண்டதும் சற்று குணமாகியது. இப்படியே சில நாட்களுக்கு நீடித்தது என்கிறார்கள். சிலருக்கோ மயக்கம், உடல் சோர்வு போன்றவை ஒமைக்ரான் பாதிப்பு ஏழாவது அல்லது எட்டாவது நாளில் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள். அதனால் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |