நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. சில நாட்களாக லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. அதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக பரவும் சூழலில் ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி. கே. பால் பேசுகையில், டெல்டா வகை வகை வைரசை விட ஒமைக்ரான் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதனை சாதாரணம் ஜலதோஷம் என்ற அளவில் எடுத்துக்கொள்ள கூடாது. மேலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. எனவே மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் விகிதம் குறைவு போல் தோன்றினாலும், தொற்று பாதிப்பு பெரிய அளவில் இடம் பிடித்துள்ளது. எனவே தொற்று பரவலை குறைக்க தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதுடன் மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.