Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. இந்தியாவில் அடுத்த லாக்டவுன்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை குறைந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவில் தோன்றியுள்ள உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றும் அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து ஒமைக்ரான் கொரோனா வின் 3-வது அலையாக இருக்கலாம் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த 2 வாரங்களில் அதிக பாசிட்டிவ் விகிதத்தை பதிவு செய்த மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதுபற்றி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 27 மாவட்டங்கள் கடந்த 2 வாரத்தில் அதிக கோவிட் பாசிட்டிவ் விகிதங்களை பதிவு செய்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டும். கண்காணிப்பும் மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கடந்த 2 வாரங்களில் 3 மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்கள் 10% அதிகமான தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 7 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 19 மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களில் 5% முதல் 10% வரை தொற்றுகளை பதிவு செய்துள்ளனர். அதனால் இந்த 27 மாவட்டங்களையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று ராஜேஷ் பூஷன் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் புதிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த மாவட்டத்திலும் தொற்று அல்லது பாசிட்டிவ் விகிதங்கள் அதிகரித்தாலும், தீவிர நடவடிக்கை மற்றும் உள்ளூர் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டும். மேலும் கொரோனா பரவலின் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும். கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

அதிகாரிகள் அதை உண்ணிப்பாக கவனிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். தொற்று விகிதங்கள் அதிகரிப்பதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அவற்றை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவேண்டும். மேலும் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துதல் கூட்டம் திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் பங்கேற்பவர்கள் வரையறை படுத்தவேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ராஜேஷ் பூஷன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |