உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கர்நாடகாவில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கிற்கு கன்னட திரையுலகினர் உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அரசு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற மறுத்துவிட்டது.