Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் நாட்டின் 16 மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி மத்திய பிரதேசத்தில் இந்த வைரஸ் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா குஜராத் மற்றும் டெல்லியில் அதிக அளவில் தொற்று பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று 24 மணி நேரத்தில் 30 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களில் இருந்து மக்கள் வருகிறதால் ஒமிக்ரான் மாறுபாடு வைரஸ் மத்திய பிரதேசத்தில் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்க முடியவில்லை. எனவே மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணிதல், தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ஒருவருக்கு அவரது வீட்டில் தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்த இடமில்லை என்றால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவார்கள். அதுமட்டுமில்லாமல் 50% மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு செல்லவேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும்  சினிமா அரங்கு போன்ற இடங்களுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |