Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. ஐடி ஊழியர்களுக்கு இனி இப்படித்தான்…. வெளியான தகவல்…!!!!

சீனாவில் வூகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவியது. இந்த வைரஸ் தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர். தினக்கூலி முதல் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் வரை எல்லோருடைய வாழ்விலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஐடி துறையில் வேலை செய்பவர்கள் வேறு வழி இல்லாமல் தங்களின் வீட்டை அலுவலகமாக மாற்றி பணி செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டனர்.

அந்த வகையில் வொர்க் பிரம் ஹோம் என்கிற புதிய வேலை அமைப்பை பின்பற்றி வந்தோம். தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும்படி இருந்த ஐடி துறை ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர். பல ஐடி நிறுவனங்கள் 2022-ஆம் ஆண்டு முதல் தனது ஊழியர்களை பணிக்குத் திரும்பும் படி கூறிவந்துள்ளது.

ஆனால் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக அந்த நிறுவனங்களும் பெரும் குழப்பத்தில் உள்ளது. இந்த நிலையில் சில ஐடி நிறுவனங்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மிகப்பெரிய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸில் தற்போது 10% ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று பணி செய்து வருகின்றனர். அடுத்து மீதமுள்ள ஊழியர்களை பணிக்கு அழைக்கும் நேரத்தில் ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது. அதனால் தற்போதைக்கு இதைப் பற்றிய தெளிவான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |