கொரோனா தொற்று பரவலால் உலக நாடுகளுக்கிடையே அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோன தொற்றான ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஒமைக்ரானைவிட வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்றுப் பரவலானது இஸ்ரேல், அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. அதனால் நெதர்லாந்து நாடு ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கடந்த நவம்பர் மாதம்-28 முதல் உணவகங்கள், பொது இடங்கள், திரையரங்குகள் ஆகிய இடங்கள் 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.
இந்தநிலையில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற ஜனவரி மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது.மேலும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து பள்ளிகளுக்கும் 2 வாரம் விடுமுறை என்று அறிவித்திருந்தது. இவை தற்போது 1 வாரத்திற்கு நீட்டி மொத்தம் 3 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இவ்வாறு பொதுமக்களின் நலன் கருதி தொற்று பரவலை கட்டுபடுத்த நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அவர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளார்.