உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நெதர்லாந்து அரசாங்கம் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளான பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையான ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
மேலும் நெதர்லாந்து நாட்டில் 5-வது அலை பரவி வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய மற்ற கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகரித்துவரும் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஊரடங்கு விதிமுறைகளை வருகிற ஜனவரி மாதம் 14-ஆம் தேதி வரை நீடித்துள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை என்றும் அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.