Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி: தமிழகம் முழுவதும்…. 75,000 படுக்கைகள் தயார்…!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சமே இன்னும் நீங்காத சூழல் ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வெளிமாநிலங்களில் மட்டுமே பரவி வந்த கொரோனா தற்போது தமிழகத்திலும் நுழைந்து விட்டது. ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் முந்தைய அறிகுறி இருக்கலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கோவில் இருந்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இதனால் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மருத்துவ கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |