Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பல்வேறு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிக அளவில் இல்லை. ஆனால் 2-வது அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதால், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லியில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு இன்று 125-ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் வைரஸும் மிரட்டி வருகிறது. இதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக ஒமைக்ரான் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான அனைத்து கூட்டங்களுக்கும் தடை விதித்துள்ளது. மேலும் அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சாரம், மதம் மற்றும் திருவிழா தொடர்பான கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக ஆய்வு செய்து கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடிய இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கண்டிப்பாக வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தால் செயல்பட அனுமதிக்கப்படும். மேலும் உணவகங்கள் மற்றும் பார்கள் இருக்கைகளில் பாதி அளவில் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் தொடர்ந்து 100% இருக்கைகளை பயன்படுத்தி இயங்கலாம். ஆனால் ஆடிட்டோரியத்தில் மற்றும் கூட்டு அரங்குகளில் 50% வரை மட்டுமே அமரவேண்டும். கண்காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது. மேலும் இந்தியாவில் 213 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் 57 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |