இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதன்படி தற்போது இந்தியாவில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் புத்தாண்டுக்கு மக்கள் அதிகம் கூடுவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாநில அரசுகள் தடை விதித்துள்ளது.
மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் ஒமைக்ரான் பரவல் காரணமாக பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த இருந்த நிலையில் மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் ஒமைக்ரான் பாதுகாப்பு நடவடிக்கையாக பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் மரணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.