Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. மாநிலங்களிடையே அதிகரிக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும், வேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாறிய தொற்றாக இருப்பதால் இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200க்கு மேற்பட்டோருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று அதிகம் பரவாமல் தடுக்க தொற்று பாதித்த மாநிலங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மணிப்பூர், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 40% பேருக்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. அத்துடன் நேற்றுமுன்தினம் 3,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் நேற்று 5,368 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பையிலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மும்பை நகரில் மட்டும் 3,555 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் 2 மடங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா தொற்றை கட்டுபடுத்த மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை மற்றும் 144 தடையை விதித்துள்ளது. அத்துடன் மும்பையில் உள்ள கடற்கரைகள், திறந்தவெளி மைதானங்கள், பூங்காக்கள் திறக்கவும் மற்றும் ஊர்வலம் செல்லவும் தடை என்றும் இந்த கட்டுப்பாடு ஜனவரி 15-ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |