இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறதால் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களை செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுவரை தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 57 பேர் மற்றும் டெல்லியில் 54 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக வடமாநிலங்களில் ஊரடங்கு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று இது குறித்து ஆலோசனை நடத்தினார். இதனால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.