Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் சாதாரண காய்ச்சல் தான்…. அச்சம் தேவையில்லை…. யோகி ஆதித்யநாத்….!!!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருவது உண்மைதான். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் தேவை.

கொரோனா 2-ஆம் அலையை ஒப்பிடுகையில் இதன் வீரியம் குறைவு. எனவே அச்சப்பட தேவையில்லை. டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைய 15 முதல் 25 நாட்கள் தேவைப்பட்டன. ஆனால் ஒமைக்ரானால் பாதிக்கபட்டால் விரைவிலேயே குணமாகி விடலாம். இருந்தாலும் நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நம் மாநிலத்தில் 8 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 15 முதல் 18 வயது வரையிலான 1.4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 2,150 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. லக்னோவில் மட்டும் 39 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |