கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்று கேள்வி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் ஒமைக்ரான் வைரஸ் நினைத்து அச்சம் கொள்ளவேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துவது, சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து கொள்வது ஆகியவற்றை முறையாக கடைபிடித்தாலே கட்டுப்படுத்த முடியும்.
கொரோனா தற்போது உருமாறி இருக்கிறது. உருமாறுதல் என்று இயல்பானதுதான் .அனைவரும் தடுப்பபூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்தாலே போதும் ஊரடங்கு தேவைப்படாது. இருந்தாலும் ஊரடங்கு குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் படியே நடப்போம் என்று தெரிவித்துள்ளார்.