Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் பரவல்…. பள்ளிகள் மூடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்த நிலையில் பள்ளிகள் மூடப்படுவது குறித்து மருத்துவ குழுவின் ஆலோசனைகளை கேட்டு முதலமைச்சர் முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் தமிழ்நாடு பொது நூல்களுக்கான ஒருங்கிணைந்த நூல் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, ஒருங்கிணைந்த நூல் பட்டியல்களை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரான் பாதிப்பு தொடர்பாக பள்ளிகள் மூடப்படுவது குறித்து முதலமைச்சர் ஆலோசித்து முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

Categories

Tech |